Header Ads

Breaking News
recent

வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா!!



வீதியில் மயங்கி விழுந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதகைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.

வென்னப்புவ - புஜ்ஜம்பொல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 ஆம் திகதி மாலை குறித்த நபர் மயங்கி விழுந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.