முகக்கவசமின்றி அத்தியாவசிய பொருள் கொள்விற்காக வருகை தந்த நபர் ஒருவர் கைது....

அழுத்கம – தர்கா நகர் பகுதியில் முகக்கவசமின்றி அத்தியாவசிய பொருள் கொள்விற்காக வருகை தந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் தளர்த்தப்பட்டது.
இதன்போது பொது மக்கள் வாகனங்களில் பயணிப்பதோ, அல்லது தனிமைப்பட்ட வாகனங்களில் சென்று பொருட் கொள்வனவில் ஈடுபடுவதோ ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தர்காநகரில் நபர் வீல்பெரக் என அழைக்கப்படும் பாரம் தூக்கியை பயன்படுத்தி பொருட்களை கொள்வனது செய்துக்கொண்டு அங்காடியை விட்டு வெளியேறினார்.
இதன்போது அவர் முகக்கவசம் அணியாமை தெரியவந்துள்ளமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
