Header Ads

Breaking News
recent

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் மாதங்களில் மாற்றம்



சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதியில் திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் கால இடைவெளியை குறைத்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை ஓகஸ்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
Powered by Blogger.