தீ கட்டுப்பாட்டிற்குள்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி குறித்த கப்பல் இந்தியாவிலிருந்து நைட்ரிக் எசிட் 25 டொன் உள்ளிட்ட 1486 கொள்கலன்களுடன் வருகை தந்த கப்பலே மேற்படி தீ விபத்தில் சிக்கியது.
கப்பலில் ஏற்பட்ட தீயை கடடுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் கடற்படையின் உதவி கோரப்பட்டதோடு, தற்சமயம் முழுமையாக தீ கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்தது.