Header Ads

Breaking News
recent

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, தமது இல்லத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடையும் - ரம்ஜான் அன்று அவர்கள் அறுசுவை உணவு உண்ணத் தேவையான பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் - கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9-5-2021) தமது இல்லத்தில் - கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் - பரிசுப் பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 2200 பேருக்கு கொளத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் இல்லங்களுக்குச் சென்று புத்தாடையையும் பரிசுப் பொருட்களையும் வழங்க உள்ளனர்.

இன்று காலை முதலமைச்சர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள் உடனிருந்தார்.



Powered by Blogger.