Header Ads

Breaking News
recent

திருகோணமலை நகர சபையினால் PCR இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான



COVID 19 காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புக்களும் அதிகரிப்பதன் விளைவாக எமது மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் . மேலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் PCR இயந்திரம் இல்லாமையினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக உரிய நேரத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சிகிச்சை வழங்குவதில் சுகாதார துறையினர் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், PCR இயந்திரம் ஒன்றினை பொது வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யுமாறு வேண்டுதல் கடிதம் ஒன்றினை நகராட்சி மன்றத்திற்கு அனுப்பியிருந்தார். எனவே, இப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் திருகோணமலை நகரசபையினால் PCR இயந்திரம் ஒன்றினை திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு வழங்குவதற்கு நகரசபை உறுப்பினர்கள், மற்றும் தலைவர் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளார்கள் ( உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சம்மதக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது).

PCR இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு 5.5 மில்லியன் ரூபா தேவைப்படுகின்ற நிலையில், இதற்கான நிதியினை ஒவ்வொரு உறுப்பினரும் தலைவரும் தமது வட்டாரத்திற்கான அபிவிருத்தி நிதியிலிருந்து வழங்குவற்கு தீர்மானித்துள்ளார்கள்.

சபை நிதியினை பயன்படுத்துவதற்கு கௌரவ ஆளுநர் (கிழக்கு மாகாணம்) அவர்களின் அனுமதியினை பெறுக்கொள்வதற்காக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடக விண்ணப்பக்கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் நகராட்சி மன்றத்தின் நிதி தொடர்பான விபரங்களும் கௌரவ ஆளுநர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கௌரவ ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் PCR இயந்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான தொடர் நடவடிக்கைளை அரசாங்கத்தின் நிதிச்சட்ட விதிகளுக்குக்கமையவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமையவும் நகராட்சி மன்றம் மேற்கொள்ளும்.

காலத்தின் தேவையை உணர்ந்து இத் தீர்மானம் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. COVID 19 தொற்றில் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்த சகல உதவிகளை எமது மக்களுக்கும் சுகாதார துறையினருக்கும் வழங்குவதற்கு நகராட்சி மன்றம் எப்போதும் பின்நிற்கப்போவதில்லை.

"சுகாதார வழிமுறைகளைப்பேணி நம்மையும் நம் உறவுகளையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவோம்"

நகராட்சி மன்றம்,

திருகோணமலை
Powered by Blogger.