திருகோணமலை மாவட்டத்தில் 100 ஐ கடந்த covid மரணம் 95 கற்பிணித்தாய்மாருக்கு இதுவரை தொற்று உறுதி...

இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 107 ஆக அதிகரித்திருக்கின்றது Covid மரணங்கள் கடந்த ஆறு நாட்களில் 20 covid மரணங்கள் பதிவு . இதுவரை 95 கற்பிணித்தாய்மாருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது . 06.06.2021காலை 10 மணி தொடக்கம் 07.06.2021 காலை 10 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 14 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு மூன்று மரணங்களும் பதிவாகியிருக்கிறது .
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 3630 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டள்ளதோடு நடப்பு மாதத்தில் இன்று காலை 10 மணிவரை 205 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமணை தகவல் வெளியிட்டுள்ளது .