Header Ads

Breaking News
recent

சிலாபம் கடற்கரைக்கு வந்த 10 பொதிகள்

இந்தியாவில் இருந்து கடத்தல் காரர்களால் அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கேரளா கஞ்சா பொதிகள் இலங்கையின் சிலாபம் கடற்பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள பொதிகளில் 23 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.

குறித்த பகுதியில் மாத்திரம் கடந்த 5 தினங்களில் 303 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

Powered by Blogger.