திருகோணமலை நாகம்மாள் ஆலயத்தில், வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது...

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் பகுதியிலுள்ள அருள்மிகு நாகம்மாள் ஆலயத்தில், வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா சட்டவிதிகளை மீறி, நேற்று முன்தினம் (06) பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போதே, சம்பூர் பொலிஸார், இவர்களை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட 12 பேரும், நேற்று திங்கள் கிழமை (07) மூதூர் நீதவாான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, அவர்கள் 12 பேரையும், இம்மாதம் 21 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் நீதவான், சம்பூர் பொலிஸாருக்கு
உத்தரவிட்டார்.
கொரோனா தொற்று நிலை காரணமாக அதிகளவானோர் ஒன்றுகூடுதல், மத ஸ்தலங்களில் கூட்டு வழிபாடுகள், களியாட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.