Header Ads

Breaking News
recent

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்!!!


(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (15) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருமணமான நபர் எனவும் கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த கலீல் றிப்னாஸ் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி சட்ட வைத்திய அறிக்கைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.