Header Ads

Breaking News
recent

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,759 ஆக அதிகரித்துள்ளது...



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 527 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,759 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,893 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 184,090 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல், நாட்டில் இதுவரையில் 2,011 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Powered by Blogger.