Header Ads

Breaking News
recent

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டதிலும் வழமை போல் இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரித்துள்ளர்.

(செய்தியாசிரியர் பாத்திமா பசுஹா) 
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டதிலும் வழமை போல் இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரித்துள்ளர்.

மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமைபோல் இயங்குவதை எம்மால் காணக்கூடியதாக இருந்ததுடன் இதேபோன்று தனியார் மற்றும் அரச பேருந்துகள் மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையிணையும் வழமைபோல ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார் இருப்பினும் அத்தியாவசிய தேவைகள் மட்டுமல்லாமல் திருமலை நகர் பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் என்பன வழமை போல் திறந்து இருப்பதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இருப்பினும் ஒரு மாத கால போக்குவரத்து தடையினை தொடர்ந்து மக்கள் இவ்வாறு ஒன்று கூடி கொள்வனவில் ஈடுபடுவது சற்று சிந்தித்து செயல்படவேண்டிய விடயம் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

Powered by Blogger.