Header Ads

Breaking News
recent

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 55 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு


நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 55 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

22 பெண்களும் மற்றும் 33 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினத்தில் இதுவரை 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 227,765 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 192,478 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.