மனித பாவனைக்கு ஒவ்வாத 700 கிலோ கிராம் கோழி இறைச்சியுடன் ஒருவர் கைது

மனித பாவனைக்கு ஒவ்வாத 700 கிலோ கிராம் கோழி இறைச்சியைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி அவர் இந்த கோழி இறைச்சியைக் கொண்டு சென்ற வேளையில் வவுனியா ஈரட்டை பகுதியில் வைத்து கைதானார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.