சேதனப்பசளை மூலம் நஷ்டம் ஏற்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் (முழு விபரம் உள்ளே)

(திருகோணமலை நிருபர் பாயிஸ்)
கால்நடை வளர்ப்பு, பண்ணை மேம்பாடு, பால் மற்றும் முட்டை உற்பத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கால்நடை வளர்ப்பு, பண்ணை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், பிரதம செயலாலர் திணைக்கள தலைவர் செயலாலர்கள் உற்பட பல அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் நஞ்சற்ற விவசாயத்தை கட்டியெளுப்புவது தொடர்பிலும் கால்நடை உற்பத்தி மற்றும் பால் முட்டை உற்பத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் கால்நடை வளர்ப்பு, பண்ணை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் உலகில் இரசாயன உரத்திணை தடை செய்த முதலாவது நாடாக நாம் திகழ்கிறோம் காரணம் எமது நாட்டு மக்களின் சுகாதாரம் ஆரோக்கியம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இரசாயன உரத்தினை தடைசெய்து சேதன பசளைக்கு நாங்கள் விவசாயிகளை ஊக்குவிக்கிறோம்.
மேலும் ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விவசாய அமைச்சுக்கு பல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது இவ் வேலைத்திட்டத்தின் செயல்திட்டத்தில் யாராவது ஒரு விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடு செய்யும் நோக்கில் அரசாங்கம் அந்த விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்க ஜனாதிபதி அவர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
உதாரணமாக இரசாயன உரம் பயன்படுத்தி நூறுவீதம் இலாபம் அடையும் ஒரு விவசாயி சேதனப் பசளை மூலம் 80 வீதம் லாபம் அடைந்து 20 வீதம் நட்டத்தை அடைந்திருந்தாள் நிச்சயமாக அரசாங்கத்தினால் அந்த 20 வீதமான நஷ்டயீடு வழங்கப்படும் என கால்நடை வளர்ப்பு பண்ணை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் அவர்கள் தெரிவித்தார்
மேலும் ஊடகவியலாளர் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் 50,000 ஐ விட அதிகமான கறவை பசுக்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள் ஆனால் கிழக்கு மாகாணத்தில் பசும்பால் பெறுவதட்க்கு பெரும் தட்டுப்பாடாக இருப்பதாகவும் யாழ்ப்பாணம் போன்ற வடக்கு பிரதேசத்தில் மக்கள் பாவனைக்கு பால் கிடைப்பதாகவும் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
கிழக்கு மாகாணத்தில் பெறப்படும் பசும் பால் அதிகம் தயிர் உற்பத்திக்கு பயன்படுத்துவதாகவும் கிழக்கில் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் அதிகம் மக்கள் அன்றாட பவானிக்கு பால் கொள்வனவு செய்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
