சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை...

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறையாத்தீவு களப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று (05) சனிக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டு பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவப்புலனாய்வு பிரிவினரும், முதலைக்குடா கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒன்பது(09) வறல்களும், ஒரு சிலிண்டர்,இரண்டு கேன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த உற்பத்தி நிலையமானது ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள களப்பு பகுதியிலேயே இயங்கி வந்துள்ளமையுடன், தோணியில் பயணித்தே இந்நிலையத்தினை முற்றிகையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.