Header Ads

Breaking News
recent

"க்ரேன்ட் மாஸ்டர் அனா" வுக்கு நாமல் ராஜபக்ஷ, றிஸ்லி முஸ்தபா ஆகியோர் பரிசு வழங்கிவைப்பு..!


ஆசிய சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதித்து சாதனை சுட்டி என்றழைக்கப்படும் "க்ரேன்ட் மாஸ்டர்" மகுடத்தை வென்று நாட்டுக்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அனா அண்மையில் ஊடகங்களுக்கு பேசும் போது ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இக் காணொளியை பார்த்த றிஸ்லி முஸ்தபா உடனடியாக இன்று அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சரை அனா சந்திக்க ஏற்பாடு செய்ததுடன் இருவரும் இணைந்து அனாவுக்கு "டெப்" ஒன்றினை பரிசாக வழங்கினர்.

அக்குழந்தைக்கு நேற்றையதினம் வழங்கிய வாக்குறுதியை மிகவிரைவாக இன்றே நிறைவேற்றிய றிஸ்லி முஸ்தபாவுக்கு பெற்றோர்கள் தனது நன்றியை தெரிவித்தனர்.

Powered by Blogger.