பேஸ்புக் பதிவுகளால் கம்பி எண்ணும் இலங்கை இளைஞர்கள்!

பேஸ்புக் மூலமாக கருத்துக்களைப் பதிவிட்ட 100ற்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த வருடத்தில் மாத்திரம் இந்த 100 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் சொந்தக் கருத்துக்களைக்கூட இளைஞர்களுக்குப் பதிவிட முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.