காலியில் காருடன் கடத்திச் செல்லப்பட்ட இளம் யுவதி! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காலி – கராபிட்டிய வங்கியொன்றுக்கு அருகில் இளம் யுவதியொருவர் காருடன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சகோதரியுடன் கராப்பிட்டிய பகுதியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்றிருந்தபோதே குறித்த கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
யுவதியை கடத்திச் சென்ற சந்தேகநபர், ரத்கம பகுதியில் வைத்து வாகனத்தை நிறுத்தி, அவரை வாகனத்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.
பின்னர் யுவதியிடமிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் அவர் அணிந்திருந்த தங்க நகையையும் கொள்ளையிட்டு குறித்த யுவதியை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டு சந்தேகநபர் காரை கடத்திச்சென்றுள்ளார்.
இதனையடுத்து 26 வயதான குறித்த யுவதி வீடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னரான விசாரணைகளையடுத்து, பூஸா பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.