இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி : கசிப்பு காய்ச்சிய இருவர் கைது....

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வு பிரிவினரும் வாழைச்சேனைப் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது கசிப்பு காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (12) சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு தட்டாவெளி, அக்குராணை பிரதேசத்தில் வைத்தே 26, 20 வயதுடைய வாகனேரியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கோடா 420 லீற்றர், ஸ்பிரிட் 20 லீற்றர், கசிப்பு வடிக்க பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது
கொரோனா பரவல் காரணமாக தற்போது அமுலிலுள்ள பயணத்தடையை சாதகமாகப் பயன்படுத்தி இவ்வாறான சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைப் பெற்றுள்ளதுடன், அவ்வாறானவர்களை பொலிஸாருடன் இணைந்து கைது செய்வதற்கான துரித நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.



