Header Ads

Breaking News
recent

சங்கிலியில் கைகள் கட்டப்பட்டு, தலையில் துப்பாக்கி சூட்டு அடையாளங்களுடன் சடலமொன்று கண்டெடுப்பு..!



கொழும்பு புறநகர் பகுதியான நவகமுவ − ரனால பகுதியில் களனி ஆற்றில் மிதந்து வந்த ஆண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இந்த சடலம் இன்று நண்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைகள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளதுடன், தலையில் இரண்டு துப்பாக்கி சூட்டு அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 23ம் திகதி ஆண்ணொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைத்திருந்தது.

குறித்த நபரின் கைகளை சங்கிலியால் கட்டி, அடையாளம் தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் முறைபாடு கிடைத்திருந்தது.

இந்த நபர் ஹங்வெல்ல பகுதியில் தற்காலிக இடமொன்றில் தங்கியிருந்ததுடன்,

சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கடத்திச் செல்லப்பட்ட நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
Powered by Blogger.