Header Ads

Breaking News
recent

சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...



மட்டக்களப்பு ஆயித்தமலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த ஒருவரை நேற்று (04) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சம்பவதினமான நேற்று பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு மறைத்து வைக்கப்பட் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.