Header Ads

Breaking News
recent

மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்து மரணம்...



(முல்லைத்தீவு - தவசீலன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு இருட்டு மடு கிராமத்தில் மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளார்.

வெள்ளையன் சண்முகநாதன் என்ற 51 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.