Header Ads

Breaking News
recent

தனிமைப்படுத்தப்பட்ட. பெரிய கிண்ணியா மாலிந்துறை பகுதிகளில் ஆன்டிஜென் பரிசோனை...


(திருகோணமலை நிருபர்) 
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்,ரிஸ்வி அவர்களின் தலைமையில் இன்று (05) தனிமைப்படுத்தப்பட்ட. பெரிய கிண்ணியா மாலிந்துறை பகுதிகளில் ஆன்டிஜென் பரிசோனை மேற்க்கொள்ளப்பட்டது.

Covid - 19 கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் கிராமங்களை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கவும் இன்று ஆன்டிஜென் பரிசோதனை 100 பேருக்கு மேட்கொள்ளப்பட்டதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்,ரிஸ்வி தெரிவித்தார்

மேலும் இவ் ஆன்டிஜென் பரிசோதனையில் 4 Covid-19 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்ட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்,ரிஸ்வி தெரிவித்தார்

எனினும் தற்போதைய நிலையில்தொற்றாளர்களின் சில  பகுதிகளில் குறைவடைந்துள்ளதாகவும் ஆனால் கிண்ணியாவின் ஏனைய பகுதிகளில் Cvid-19 தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்,ரிஸ்வி

மூன்றாவது அலையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை. 400 ஆகவும் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் பொது மக்கள் தொடர்ச்சியாக சுகாதார நடவடிக்கை பின்பற்றுமாறும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் குணங்குறிகள் காணப்பட்டால் உடன் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Powered by Blogger.