Header Ads

Breaking News
recent

பஷிலுக்காக இராஜினாமா செய்யும் எம்.பி இவர் அல்ல-அவர்தான்!



ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகராகிய பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பிரவேசிப்பதற்காக ஜயந்த வீரசிங்க இராஜினாமா செய்யப்போவதாக இறுதியாக வந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கூறுகின்றது.

முன்னதாக பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக வெளியான செய்திகளை ஆளும்கட்சி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மறுத்துள்ளார்.

இந்த நிலையில், மொட்டுக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த வீரசிங்கதான் இவ்வாறு இராஜினாமா செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

எம்.பி பதவியை இழக்கப்போகின்ற சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கவுக்கு 70 வயதாகும். அவர் அடுத்தமாதத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்படப் போகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.