Header Ads

Breaking News
recent

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து உயிரிழப்பு...


மட்டக்களப்பு-பொலிஸாரினால் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான குறித்த நபர் மட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவர் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு, அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மட்டக்களப்பு வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் அவரின் வீட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் விஜயம் செய்து அவ் பிரச்சனை சம்பந்தமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் எமது மக்களின் பிரச்சனைக்கு எப்போதும் எம்மவரின் குரல்தான் முதலில் ஒலிக்கும் என ஆறுதல் கூறியமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.