இனி எரிவாயு இறக்குமதியில் அரசாங்கம் தலையீட தீர்மானம்

சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில், அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் தலையீடு செய்யவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் காலத்தில் எரிவாயு கொள்வனவு தொடர்பிலான செயற்பாடுகளுக்கு திறைசேரியின் உயர் மட்ட குழுவொன்று தலையீடு செய்யும் என அவர் கூறுகின்றார்.
சமையல் எரிவாயு இறக்குமதியின் போது, இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள், ஊழல்களை இந்த செயற்பாட்டின் ஊடாக தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.