மாத்தளையில் காட்டுப்பன்றி என நினைத்து மனிதனை சுட்ட காணி உரிமையாளர்!

மாத்தளை – றத்தோட்டையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மிளகு பயிற்செய்கை காணிக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது காணி உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் துப்பாக்கியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணிக்குள் காட்டுப்பன்றி நுழைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் தாம் பிரயோகம் செய்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கின்றார் என கூறப்படுகிறது.