பால், முட்டை, இறைச்சி உற்பத்திகளை துரிதப்படுத்துகிறது அரசாங்கம்....
தற்போதைய கொவிட்-19 தொற்றை எதிர்கொண்டு பால், முட்டை மற்றும் 

இறைச்சி ஆகியவற்றின் உற்பத்திகளை துரிதப்படுத்த கால்நடை, பண்ணை அபிவிருத்தி மற்றும் பால், முட்டை தொடர்பான தொழில்துறை அமைச்சு தலையிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்தார்.
இத்தகைய உற்பத்திகளை விற்பனை செய்யும் நடமாடும் விற்பனையாளர்கள் தத்தமது பகுதிகளிலுள்ள பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கால்நடை அலுவலகங்களிலிருந்து நேரடியாக அனுமதி பெறலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
பால், முட்டை மற்றும் இறைச்சி பொருட்கள் தவிர ஒருவர் விலங்குணவு, மருந்துகளைக் கொண்டு செல்ல மேற்படி அலுவலகங்களிலிருந்து அனுமதி பெறலாம்.
இதேவேளை நடமாடும் காய்கறி, பழக்கடைகளின் உரிமையாளர்கள் தமது வாகனங்களில் முட்டை மற்றும் இறைச்சியை விற்பனை செய்யுமாறும் அமைச்சர் கோரியுள்ளார்.