திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் கைக்குண்டொன்று மீட்ப்பு...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் கைக்குண்டொன்று இன்று (20) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பலகாமம் விஷேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
கைக்குண்டு கடந்த யுத்த காலங்களின் போது விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு யாருக்காவது சொந்தமானதா என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வலி வர வில்லை.
ஆனாலும் குடித்தொகை குண்டை செயலிழக்கச் செய்வதற்காக திருகோணமலை நீதிமன்றில் கட்டளை ஒன்றை பெற உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.