திருகோணமலை-கோமரங்கடவல காட்டுப் பகுதிக்குள் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் குளவிக் கொட்டி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கோமரங்கடவல காட்டுப் பகுதிக்குள் வீரப் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றது.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் கோமரங்கடவல-ஒருவர்
இந்திக்கட்டுவெவ பகுதியைச் சேர்நத சஸங்க நிரோஷன (13வயது) எனவும் தெரியவருகின்றது.
வீரப்பழம் மறிப்பதற்காக அயலவர்கள் செல்வதாக கூறி விட்டு சக நண்பர்களுடன் வீட்டுக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்ற போது வீர மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததில் குளவி சிறுவனுக்கு குற்றியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.