Header Ads

Breaking News
recent

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன...



மேலும் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாஹென பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.