Header Ads

Breaking News
recent

இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் புதிய வகை ஆபத்தான வைரஸ்..!! பெற்றோர்களே அவதானம்.



இலங்கையில் தற்போது பூனை மற்றும் நாய்கள் மூலம் சிறுவர்களுக்கு புதிய நோய் தொற்றுவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) என அந்த வைரஸூக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் சிறுவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த வைரஸ் உருவாகின்றது.

இந்த விலங்குகளுடன் தொடர்பை பேணும் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தோலில் புழுக்கள் ஏற்படும் என்றும் கூறினார்.

பின்னர் அந்த புழுக்கள் குழந்தைகளின் கண்கள், மூளை மற்றும் நுரையீரலுக்குள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஒரு குழுவை அவர் சந்தித்ததாகவும் நிபுணர் கூறினார்.

இதுபோன்ற வீட்டு விலங்குகளுக்கு மருந்து கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
Powered by Blogger.