Header Ads

Breaking News
recent

கரையொதுங்கிய சுறா மீன் கடலுக்குள் அனுப்பி வைப்பு


திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சிக்கிய சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் கடந்த காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லறாவ மீன் பிடிகிராமத்தில் வசித்து வந்தவர்கள் மீன்பிடிப்பதற்காக சென்று வேலையில் மீன் வலையில் சிக்குண்டு நிலையில் அந்த சுறா மீன் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.



Powered by Blogger.