காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் டிப்பர் வாகனம் வயல் பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பெரிய பாலத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் செங்கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் எந்த உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்பதோடு சாரதியும் எந்த வித காயங்களும் இல்லாமல் தப்பியுள்ளார்
இவ்விபத்துக்கு வாகனத்தின் வீலில் ஏற்பட்ட பாதிப்புதான் காரணம் என வாகன சாரதி தெரிவித்துள்ளார்.