Header Ads

Breaking News
recent

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளுக்கு இன்னும் அனுமதியில்லை



மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக அடுத்த வாரம் மாகாணங்களுக்குள் மாத்திரம் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய கொரோனா வைரசு தொற்று அனர்த நிலை இன்னும் குறைவடையவில்லை என்று இராணுவத்தளபதி எமக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானம் மாகாணங்களுக்கிடையில் பேருந்து அல்லது ரயில் சேவைகள் இடம்பெறக்கூடாது என்பதாகும். இந்த தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.