Header Ads

Breaking News
recent

பிற்போடப்பட்டது நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா!



வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது என ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்துவதற்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று காலை அவசரமாகக் கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
Powered by Blogger.