CID உயர் பதவியொன்றுக்கு முதல் தடவையாக பெண் ஒருவர் நியமனம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பதவிக்கு, முதல் தடவையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன், பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான இமேஷா முத்துமால , இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.