Header Ads

Breaking News
recent

01 கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் திருமலையில் ஒருவர் கைது...


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபரொருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவை அவரது வீட்டுக்கு கொண்டு செல்லும்போது விமானப்படையினரின் புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படை பொறுப்பதிகாரி எஸ்.ஏ.சீ. சிரந்த மற்றும் திஸாநாயக்க ஆகியோருடன் சென்ற றுவன் பிரதீப்,குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் என்.சீ. வீதியினூடாக மணிக்கூட்டு கோபுரம் பக்கமாக செல்லும் போது சோதனையிட்ட போது அவரிடமிருந்து 01 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும்,அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- சமுத்ராகம ஓட்டை வீதியில் வசித்துவரும் துவான் ரஹீம் ஆப்தீன் (53 வயது) உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.





Powered by Blogger.