Header Ads

Breaking News
recent

இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, திருமண மண்டபத்தில் 25 சதவீத எண்ணிக்கையிலானோருடன் அல்லது அதிகபட்சமாக 150 பேருடன் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன, அவை குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயற்ப்பட வேண்டும். தேவையைப் பொறுத்து, நிறுவனத்தின் தலைவர் பணியமர்த்தப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியும், அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு மாறாமல் இருக்கும்.
Powered by Blogger.