Header Ads

Breaking News
recent

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞன் கைது....



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.நிஸ்வான் இன்று (13) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை (11) சிறுமியின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள குறித்த இளைஞன் கோவிலுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த இளைஞனை நேற்று (12) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை எதிர்வரும் 27 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Powered by Blogger.