நாட்டில் இன்று இதுவரையில் 1,453 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...

நாட்டில் மேலும் 465 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 988 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, இன்று இதுவரையில் 1,453 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 278,972 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 955 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.
அதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 253, 014 ஆக அதிகரித்துள்ளது.