Header Ads

Breaking News
recent

மாங்குளத்தில் 14 வயது சிறுவனை காணவில்லை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட மாங்குளம் துணுக்காய் வீதியில் உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் எனும் 14 வயது மாங்குளம் மகா வித்தியாலய மாணவன் நேற்று இரவு முதல் காணாமல் பேயுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட மாங்குளம் துணுக்காய் வீதியில் உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் எனும் மாணவன் நேற்று(10) இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக செல்வதாக சென்ற மாணவனை காணவில்லை என மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கிணற்றில் குளிக்க சென்று உடைகள் கிணற்றடியில் காணப்படுகின்றது. கிணற்றடிக்கு சென்று மாணவன் மீண்டும் வீட்டுக்கு வந்து சவர்க்காரம் எடுத்து சென்றுள்ளார் அவர் எடுத்துச் சென்ற சவர்க்காரம் மாங்குளம் துணுக்காய் வீதியில் அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் உள்ளது இந்நிலையில் மாணவனுக்கு என்ன நடந்தது என்று பெற்றோர் குளப்பமடைந்துள்ளனர்.

குறித்த மாணவனை கண்டவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0770871475.
Powered by Blogger.