Header Ads

Breaking News
recent

யாழில் 46 குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய தாதிக்கு கொரோனா தொற்று!


யாழ்.நெடுந்தீவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஏற்றிய 46 குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் சமூகமளித்த தாய்மாருக்கு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த குழந்தைகள் தாய்மார் மற்றும் மருத்துவ தாதியுடன் தொடர்புபட்டவர்களுக்கு இன்றைய தினம் அவசரமாக பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த மருத்துவத்தாதி வேலணையிலிருந்து நெடுந்தீவு வைத்தியசாலைக்குச் சென்று பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.