Header Ads

Breaking News
recent

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 563 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியலாத்தில் 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடைமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கடந்த 20 ஆம் திகதி வௌியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.