Header Ads

Breaking News
recent

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்.


ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் திங்கள் (5) முதல் பொது மக்களுக்கான தனது சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளது.

எவ்வாறாயினும் இச்சேவைகள் முன் பதிவு செய்த குறிப்பிட்ட எண்ணிக்கையானோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி தமது தேசிய அடையாள அட்டைகளை பெறும் நோக்கத்துக்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு முன் ஒரு திகதியையும் இலக்கத்தையும் ஒதுக்குவது கட்டாயமாகும்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் பின்வரும் எண்களைத் தொடர்பு கொண்டு ஆட்பதிவுத் திணைக்களத்தின் உப அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பத்தரமுல்ல பிரதான அலுவலகம் : 0115226126 / 0115226100

வடமேல் மாகாணம் 037 2224337

வட மாகாணம் 024 2227201

தென் மாகாணம் 091 2228348

கிழக்கு மாகாணம் 065 2229449
Powered by Blogger.