Header Ads

Breaking News
recent

எரிபொருள் விலை குறையும் நாள் அறிவிப்பு – இராஜாங்க அமைச்சர்


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை தான் நன்கு அறிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து மீண்டும் பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின் நாட்டில் வழமையான நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாட்டில் தற்போதுள்ள முடக்க நிலை நீக்கப்பட வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தவுடன் எதிர்காலத்தில் அதன் நிவாரணத்தை உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.