கிண்ணியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா கட்டையாறு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 58 வயது மதிக்கத்தக்க கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த முகம்மது சமூன் முகம்மது றிபாய் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மதுபான ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அவரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஹெரோயினை விற்பனை செய்யும் நோக்கில் இதனை கொண்டு வரும்போதே அல் அக்ஷா கல்லூரிக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சந்தேக நபரை திருகோணமலை போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவு கைது செய்து கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன்
இவரிடம் இருந்து 40.300 கிரேம் அளவுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது