ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஒக்சிஜன் ரெகுலட்டர் வழங்கிவைப்பு!

அகம் மனிதாபிமான நிலையத்தால் திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 இடைத்தங்கல் வைத்திய நிலையமாக செயற்படும் வைத்தியசாலைகளுக்கு அவசியமான ஒட்சிசன் சிலிண்டர் மற்றும் ஒட்சிசன் ரெகுலேட்டர் வழங்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உரிய பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளாவிடம் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.லவகுசராணாவினால் கையளிக்கப்பட்டது.
குறித்த உபகரணங்களை அரசாங்க அதிபர் திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வீ.பிரேமானந்திடம் கையளித்தார்.
30து ஒட்சிசன் சிலின்டர்கள் மற்றும் 25 ஒட்சிசன் ரெகுலேட்டர்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த பெறுமதி 21,25000 ரூபாவாகும்.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 9 சிகிச்சை மத்திய நிலையங்களுக்கும் இவை வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சமன் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட் வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.