Header Ads

Breaking News
recent

கொழும்பில் பிரபல ஊடகவியலாளரின் வீட்டிற்குள் நுழைந்த குண்டர்கள்!!!


பிரபல விளையாட்டு ஊடகவியலாளர் தனுஷ்க்க அரவிந்தவின் கொழும்பிலுள்ள வீட்டிற்குள், அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

தனது வீட்டிற்குள் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்ததாக ஊடகவியலாளர் தனுஷ்க்க அரவிந்த தெரிவித்தார்.

தனது ஆவணங்களை, வீட்டிற்குள் வருகைத் தந்த நபர்கள் தேடியுள்ளமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

எனினும், பொலிஸார் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்பின்னரே, ஏதேனும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதா என்பது குறித்து தேட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
Powered by Blogger.